25 நாட்களைக் கடந்த ‘சைரன்’

13 Mar 2024

ஹோம் மூவி மேக்கர்ஸ் சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார், சாம் சிஎஸ் இசையமைப்பில், ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் பிப்ரவரி 16ம் தேதி வெளிவந்த படம் ‘சைரன்’.

இப்படத்தின் ஜெயம் ரவி சிறைக் கைதியாகவும், கீர்த்தி சுரேஷ் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.  உணர்வுபூர்வமான படமாக அமைந்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது.

நேற்று மார்ச் 12ம் தேதியுடன்  25 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

 

Tags: siren, jayam ravi, keerthy suresh, gv prakashkumar, sam cs

Share via: