மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம்

12 Mar 2024

“பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை” படங்களை அடுத்து மாரி செல்வராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட்,  நீலம் ஸ்டுடியோஸ் இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.

கபடி விளையாட்டை கதைக்களமாகக் கொண்ட இப்படத்தின் வேலைகள் ஏற்கெனவே ஆரம்பமாகிவிட்டது.

ஒரு மனிதன் விளையாட்டையே துப்பாக்கி போன்ற வலிமை மிக்க ஆயுதமாக ஏந்தி, வன்முறையற்ற. அமைதியான, மரணமற்ற வாழ்க்கையை வாழ்வதற்காக போராடும் போராட்டத்தை விவரிக்க உள்ளது.

 

Tags: mari selvaraj, dhruv vikram, anupama parameswaran, pa ranjith

Share via: