அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’

15 Mar 2024

‘விடாமுயற்சி’  படத்தை அடுத்து அஜித் நடிக்க உள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அப்படத்திற்கு ‘குட் பேட் அக்லி’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.

தெலுங்குத் திரையுலகத்தின் பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் உருவாக உள்ளது.

‘விடாமுயற்சி’ படம் படப்பிடிப்பில் இருக்கும் போதே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பஹிரா, மார்க் ஆண்டனி’ ஆகிய படங்களுக்குப் பிறகு ஆதிக் இயக்கும் படம் இது.

2025ம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags: good bad ugly, ajith, ajithkumar, adhik ravichandran, devisriprasad, குட் பேட் அக்லி, அஜித், அஜித்குமார், ஆதிக் ரவிச்சந்திரன், தேவிஸ்ரீபிரசாத், மைத்ரி மூவி மேக்கர்ஸ்,

Share via: