இளையராஜாவின் பயோபிக் படம் ‘இளையராஜா’ ஆரம்பம்

21 Mar 2024

இந்தியத் திரையுலகத்தின் மதிப்புமிக்க இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் ‘இளையராஜா’ என்ற பெயரிலேயே தயாராக உள்ளது.

இப்படத்தின் துவக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் பாரதிராஜா, இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன், இயக்குனர்கள் சந்தானபாரதி, வெற்றிமாறன், தியாராஜன் குமாரராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கனெக்ட் மீடியா, பிகே பிரைம் புரொடக்ஷன் மற்றும் மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில், ஸ்ரீராம் பக்திசரண், சி.கே.பத்மகுமார், வருண் மாத்தூர், இளம்பரிதி கஜேந்திரன் மற்றும் சௌர்ப் மிஸ்ரா ஆகியோர் தயாரிக்கின்றனர்.

‘ராக்கி, சாணி காயிதம், கேப்டன் மில்லர்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களுக்கான நட்சத்திரத் தேர்வு நடந்து வருகிறது.

இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, முத்துராஜ்  தயாரிப்பு வடிவமைப்பு செய்கிறார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாக உள்ளது.

Tags: ilaiyaraaja, ilaiyaraja, ilayaraja, ilayaraaja, dhanush, arun matheswaran, இளையராஜா, தனுஷ், அருண் மாதேஸ்வரன்

Share via: