ரஜினியின் 171வது படத்தின் பெயர் ‘கூலி’

22 Apr 2024

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ரஜினிகாந்த் நடிக்க உள்ள அவரது 171வது படத்தின் தலைப்பு ‘கூலி’ என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே தலைப்பில், 1995ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில், சரத்குமார், மீனா நடித்த படம் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

‘கூலி’ தலைப்புக்காக வீடியோ ஒன்றையும் தயார் செய்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த வீடியோவில் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் கண்ணதாசன் எழுதிய ‘சம்போ சிவசம்போ’ பாடல் வரிகளை வசனமாக சேர்த்திருக்கிறார்கள். மேலும், பின்னணி இசையாக இளையராஜா இசையில் வெளிவந்த ‘தங்கமகன்’ படப் பாடலான ‘வா வா பக்கம் வா’ பாடலின் இசையயை மறுஉருவாக்கம் செய்துள்ளார் அனிருத்.

படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள் பற்றிய அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: coolie, rajinikanth, lokesh kanagaraj, anirudh ravichander

Share via: