விஷால் தற்போது நடித்து முடித்துள்ள ‘இரும்புத் திரை’ படம் ஸ்டிரைக் முடிந்ததும் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்கடுத்து விஷால், ‘சண்டக் கோழி 2’ படத்திலும்  நடித்து வருகிறார். இப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு ஸ்டிரைக் முடிந்ததும் ஆரம்பமாகும்.
தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டாக ஓடிய ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்கில் விஷால் நடிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் நாயகியாக  நடிக்க ராஷி கண்ணாவிடம் பேசி வருகிறார்கள்.
ராஷி கண்ணா, அதர்வாவுடன்   ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.   ‘அடங்க மறு, சைத்தான் கா பச்சா’ ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் ரீமேக் ஆக உள்ள ‘டெம்பர்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் வெங்கட் மோகன் இயக்க உள்ளார்.
விரைவில் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.

Leave a Reply