தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்குப் பஞ்சமேயில்லை. என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் சொந்தத் திறமை இல்லை என்றால் யாராலும் முன்னேற முடியாது.

தங்களது அப்பாவின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்து வைத்திருக்கும் விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் இருவரும் நடித்துள்ள படங்கள் நாளை ஜுன் 9ம் தேதி வெளியாகின்றன.

விக்ரம் பிரபு நடித்துள்ள ‘சத்ரியன்’, கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘ரங்கூன்’ படமும் நாளை வர உள்ளன.

இருவருக்குமே அவரவர் படங்களின் வெற்றி மிக முக்கியமானது. விக்ரம் பிரபு அறிமுகமான ‘கும்கி’ படம் தவிர்த்து மற்ற படங்கள் அனைத்தும் தோல்விப் படங்கள்தான். கௌதம் கார்த்திக் நடித்த அனைத்துப் படங்களுமே தோல்விப் படங்கள்தான்.

இவர்கள் இருவரும் நடித்த இந்த இரண்டு படங்களைத் தவிர வேறு எந்தப் படங்களும் நாளை வெளிவராததால் இருவருக்கும் இடையேதான் நாளைய போட்டியே.

இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்பது நாளை தெரிந்துவிடும்…

 

Leave a Reply