ஃபிலிம் மூலமே ஒளிப்பதிவு செய்து எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமா, 2002ம் ஆண்டு முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு அறிமுகமாகியது.

நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.எ. சந்திரசேகர் இயக்கிய ‘முத்தம்’ திரைப்படம் ‘டிஜி-பீட்டா’ வீடியோ தொழில்நுட்பத்தில் படமாக்கப்பட்டு ‘ரிவர்ஸ் டெலிசினி’ முறையில் ஃபிலிம் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

2004ம் ஆண்டு இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான பி.சி. ஸ்ரீராம், ‘வானம் வசப்படும்’ என்ற படத்தை ‘பேனசோனிக் AJ HDC 27′ டிஜிட்டல் கேமரா மூலம் ஒளிப்பதிவு செய்து திரையிட்டார்.

2005ம் ஆண்டு கமல்ஹாசன், ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ஒளிப்பதிவு செய்தார்.

2008ம் ஆண்டு ஆதிராஜன் இயக்கத்தில் வெளிவந்த ‘சிலந்தி’ படம் டிஜிட்டல் முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

2008ம் ஆண்டு அருண் வைத்யநாதன் இயக்கத்தில் சினேகா, பிரசன்னா நடித்து வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படம் முதன் முதலில் தமிழில் ரெட் ஒன் காமெராவில் படம் பிடிக்கப்பட்டு வெளிவந்தது.

2009ம் ஆண்டு நந்தினி இயக்கத்தில் வெளிவந்த ‘திரு திரு துறு துறு’ படம் டிஜிட்டல் முறையில் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, டிஜிட்டல் முறையிலேயே தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து 2015ம் ஆண்டு வெளிவந்த ‘தனி ஒருவன்’ படம்தான் ஃபிலிமில் கடைசியாக எடுக்கப்பட்ட படம்.

ஒளிப்பதிவில் டிஜிட்டல் தொழில்நுட்பம் அறிமுகமாவதற்கு முன்பே, ஒலிப்பதிவில் டிஜிட்டல் முறை அறிமுகமானது. இப்போது அனைத்து தமிழ்ப் படங்களுமே டிஜிட்டல் முறையில்தான் படமாக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply