ஆகஸ்ட் 30ம் தேதியன்று ‘சாஹோ, சிக்சர், மயூரன், குற்ற நிலை’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன.

இவற்றில் ‘சாஹோ’ படம் 350 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள படம். தெலுங்கு, ஹிந்தியில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் ஆனால், தமிழ்ப் படம் என்றும் தணிக்கை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் இப்படத்தை தமிழ்ப் படங்களின் பட்டியலில் சேர்த்துள்ளோம்.

‘சாஹோ’ படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. ‘லார்கோ வின்ச்’ என்ற பிரெஞ்ச் படத்தின் காப்பி என அப்படத்தின் இயக்குனர் ஜெரோம் சால்லி என்பவரே டுவிட்டரில் அது பற்றி பதிவிட்டுள்ளார். அதனால், இப்படத்தின் உண்மைத் தரம் குறைந்துவிட்டது என்பதே உண்மை.

நாம் எதிர்பார்க்காத விதத்தில் இந்த வாரம் வெளிவந்த ‘சிக்சர்’ படம் நன்றாகவே சிரிக்க வைத்தது. படம் ஆரம்பித்தது முதல் கடைசி வரை கலகலப்பாக நகர்ந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

அறிமுக இயக்குனர் சாச்சி,  மற்றும் நடித்துள்ள வைபவ், பல்லக் லால்வானி, சதீஷ், இளவரசு, ராதாரவி, ஸ்ரீரஞ்சனி என  அனைவருமே கலகலப்பாக நடித்து படத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

நம்மைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டில் ‘சாஹோ’ படத்தை விட ‘சிக்சர்’ படம் குறிப்பிடத்தக்க வசூலைப் பெறும் என்று சொல்லலாம்.

எனவே, இந்த வாரத்தின் நம்பர் 1 படம் ‘சிக்சர்’.