பொன்ராம் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தப்  படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார் . முதலாவதாக ‘இன்று நேற்று நாளை’ படத்தை டைரக்ட் செய்த ரவிகுமாரின் படத்தில், கதாநாயகியாக  ரகுல் பிரீத்சிங்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆர்.டி.ராஜா தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்க உள்ளது .

இந்தப் படத்தை அடுத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்க, சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள, மற்றொரு படத்தை , ராஜேஷ்  டைரக்ட் செய்ய உள்ளார்.

ஒரே நேரத்தில் ரவிகுமார் இயக்க உள்ள படத்திலும், ராஜேஷ் இயக்க உள்ள படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க முடிவெடுத்துள்ளார்.

Leave a Reply