போனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆன்ட்ரியா தாரங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’.

ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த ‘பின்க்’ படத்தின் ரீமேக்தான் இந்தப் படம்.

இடைவேளைக்குப் பின் படத்தை ஆக்கிரமிக்கும் நீதிமன்றக் காட்சிகள் போரடித்தாலும் அஜித்தின் ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடித்திருக்கிறது.

ஏ சென்டர்களில் மட்டுமே படத்தின் வசூல் நன்றாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பி அன்ட் சி ஏரியாக்களில் இந்தப் படம் தடுமாறி வருகிறது.

போட்டிக்கு வேறு எந்தப் படங்களும் இல்லாத காரணத்தால் இந்த வாரத்தின் நம்பர் 1 படமாக இந்தப் படம் இடம் பிடிக்கிறது.