மார்ச் 15, 2019ல் வெளிவந்த 5 திரைப்படங்களில் பலராலும் பாராட்டப்படும் ஒரே படம் நெடுநல்வாடை.

இப்படம் பற்றிய சில சிறப்புத் தகவல்கள்…

50 நண்பர்கள் ஒன்று சேர்ந்து இப்படத்தைத் தயாரித்து அவர்களுடைய நண்பர் செல்வகண்ணன்-ஐ இயக்குனர் ஆக அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இயக்குனர் செல்வகண்ணன்,  இயக்குனர்கள் சாமி, ராஜேஷ் எம் செல்வா ஆகியோரிடம் பணி புரிந்தவர்.

இப்படத்தின் அறிமுக நாயகி அஞ்சலி நாயர், விமான பணிப் பெண் ஆகப் பணி புரிகிறார்.

மார்ச் 15ல் வெளிவந்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜுலை காற்றில், கில்லி பம்பரம் கோலி, அகவன்’ ஆகிய படங்களை விடவும் ‘நெடுநல்வாடை’ படத்திற்கு விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டு அதிகமாக உள்ளது.

TMDB – Rating 8/10