விஜய் டிவி தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள்

Release Date:11 Apr 2017
தமிழ் ஆண்டின் முதல் நாளாக கொண்டாடப்படும் நாள் ஏப்ரல் 14ம் தேதியன்று அனைவருக்கும் சந்தோஷமும் மகிழ்ச்சியும் பொங்கிவர விஜய் தொலைக்காட்சி பல சிறப்பு நிகழ்ச்சிகளையும் புத்தாண்டு சிறப்பு படங்களையும் ரசிகர்களுக்கு வழங்க உள்ளது. காலை 6 மற்றும் 6.30 மணிக்கு இனிய நாளை தொடங்க மங்கள இசை மற்றும் அருளுரை போன்ற பக்தி நிகழ்ச்சிகளைக் காணுங்கள் . காலை 7 மணிக்கு காலத்தை கணிக்க பிரபல ஜோதிடர்கள் பங்குபெறும் புத்துயிர் பெருமை புத்தாண்டு நிகழ்ச்சிகள் . காலை 8 மணிக்கு தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவரும் புது படங்களை பற்றி ஒரு சிறப்பு பார்வையை, புத்தாண்டு படங்கள் நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள். காலை 8.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் இறை பக்தி நிறைந்த மற்றொரு பக்கத்தை காணுங்கள் குருவே சரணம் ரஜினி ஸ்பெஷல் நிகழ்ச்சியில் காணுங்கள். இதுவரை காணாத நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் ஆன்மீக விருப்பங்கள் பற்றி இந்த சிறப்பு நிகழ்ச்சியில் காணுங்கள். காலை 9 மணிக்கு நடுவர் சுகி சிவம் அவர்களின் தலைமையில், குடும்பத்தின் மதிப்பை அதிகரிக்கும் பொறுப்பு யாரிடத்தில் உள்ளது குழந்தைகளா அல்லது பெற்றோர்களா என்னும் தலைப்பில் நடைபெறும் புத்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்தை காணுங்கள் . காலை 10 மணிக்கு நடிகர் தனுஷின் ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி , அவர் இயக்கி வெளிவர இருக்கும் பவர் பண்டி படத்தை பற்றி தன் குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள வருகிறார் தங்க மகன் தனுஷ் நிகழ்ச்சியில் காணத்தவறாதீர்கள். காலை 11 மணிக்கு இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வந்த சிறந்த திரைப்படம் ஓ காதல் கண்மணி. துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோரின் நடிப்பில், ஏஆர் ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட் பாடல்களை கொண்ட படம். இக்கால காதலை பற்றி எடுக்கப்பட்ட இப்படத்தை காணத்தவறாதீர்கள். பிற்பகல் 2 மணிக்கு அனைவருக்கும் பிடித்த நடிகர்சிவகுமார் சமீபத்தில் தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலர் ஒன்று சேர்ந்து அதை கொண்டாடினர். சூரியா , கார்த்தி என பலர் பங்குபெற்ற சிவகுமார் 75 என்னும் நிகழ்ச்சியை காணத்தவறாதீர்கள். மதியம் 3 மணிக்கு நீயா நானா நிகழ்ச்சியில் இதுவரை பல தலைப்புகளில் விவாதம் நடந்திருக்கும், முதல் முறையாக விஜய் தொலைக்காட்சியின் பிக்ஷன் மற்றும் நான் பிக்ஷன் நடச்சத்திரங்கள் விவாதிக்கும் சிறப்பு நீயா நானா நிகழ்ச்சியை காணுங்கள். விஜய் தொலைக்காட்சில் யார் டான் என்பதை விவாதிக்க வருகின்றனர் சின்னத்திரை நட்சத்திரங்கள். மாலை 4 மணிக்கு விஜய் தொலைக்காட்சியின் பிரபல சிரிப்பு நிகழ்ச்சி என்றால் அது லொள்ளு சபா, கலக்கப் போவது யாரு மற்றும் சிரிச்சா போச்சு , இவர்கள் அனைவருமே ஒன்று கூடி ஒரு நிகழ்ச்சியில் பங்கு பெற்றால் எப்படி இருக்கும். அந்த அளவு கடந்த சிரிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த ‘கலக்கப் போவது நாங்க’ நிகழ்ச்சியை காணுங்கள். மாலை 6 மணிக்கு உங்களுக்குப் பிடித்த விஜய் தொலைக்காட்சியின் சீரியல் நட்சத்திரங்கள் ஒன்று கூடி கொண்டாட வருகின்றனர் விஜய் குடும்பம் நிகழ்ச்சியில். மாப்பிள்ளை, நீலி, சரவணன் மீனாட்சி, பகல் நிலவு ஆகிய தொடர்களின் நட்சத்திரங்கள் பங்கு பெறுகின்றனர். நடனம், விளையாட்டு போட்டிகள், கேளிக்கையான சவால்கள் என பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் வருகிறது ‘விஜய் குடும்பம்’. இரவு 8 மணிக்கு கிரிக்கெட் வீரர் தோனி என்றாலே தமிழ் நாட்டில் ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு அப்படிப்பட்ட தோனி பற்றி வெளி வந்த படம் ‘எம். எஸ். தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி’. உங்கள் விஜய் தொலைக்காட்சியில் நேயர்களுக்கென்றே சிறப்பு திரைப்படமாக . ஒளிபரப்பாகவுள்ளது. நடிகர் சுஷாந்த் சிங்க் ராஜ்புட் அவர்கள் தோனியாக நடித்துள்ளார். தோனியின் வாழ்கை பயணத்தை பற்றி சொல்லும் இத்திரைப்படத்தை காணத்தவறாதீர்கள். விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை கண்டு களித்து இந்த புத்தாண்டை இனிதாக தொடங்குங்கள் . April 14th marks the first day in Tamil calendar. People celebrate this festival with joy and hope that the new year will bring new opportunities and growth in their lives. Star Vijay has a exciting line up of movie for its viewers. Start the day with auspicious programs like Mangala isai 2017 and Arulurai at 6 and 6.30 am respectively. Get melted by the earthy music of Nadasvaram and Thavil by Pudhucherry Vinayagam & Troupein Mangala isai and get religious discourse and wishes from Kundrakudi Ponambalam Adigalar in Arulurai. A special astrology program, featuring renowned astrologers like Aditya Guruji, Kaliyur Narayanan, Srinivasa Ramanujam, Muthu Gurukal and kadagam Ramasamy in Puthuyir Peruma Puthandu at 7 am. Some exciting new movies have been lined up for release this tamil new year, watch the round up of these movies in Puthandu Padangal at 8 am. Actor Rajinikanth reveals his significant association with his divine and shares a never seen before spiritual moments of his life in Guruve Saranam Rajini Special at 8.30 am. Don't miss to know more about your favourite stars spiritual moments. Watch a thought provoking Sirappu Pattimandram at 9 am moderated by the ace moderator Sugi Sivam, along with popular speakers on the topic “ Who has more responsibility in enhancing family values and its significance - Parents or their children??”. A special show for all Dhanush lovers out there! watch a very special and an emotional show featuring Dhanush along with his family and friends on his directorial debut of the movie "Power Pandi”. Don't miss the show at 10 am. For the first time ever, one of the best romantic movie from the film genius director Mani Ratnam is O Kadhal kanmani. The movie starring Dulquer salman, Nithya Menon, Prakash Raj and many others. The movie talks about Live in relationship of two young couples. The things that happen around them changes the view of life to them forms the crux. Watch this super romantic movie at 11 am. The Ace actor Sivakumar celebrated his 75th birthday recently. watch the Birthday celebration of actor Sivakumar along with his family amidst the presence of the various stalwarts from the film industry. Don't miss Sivakumar 75 at 2 pm in Sivakumar 75. In Neeya naana we have seen shows on many topics. On account of Tamil new year, a fun filled episode for the viewers on the topic, “Who is the Don of Vijay TV? Fiction of Non-Fiction Stars of Vijay TV”. The show will have popular Non Fiction and fiction stars of Vijay TV. watch the exciting special episode of Neeya Nana at 3 pm. Get ready for a laugh riot! The best of talents from Kalakkapovathu Yaaru, Lollu Sabha, Siricha Pochu is coming together in Kalakka povadhu Nanga at 4 pm. The show will encompass a melange of Skits and Stand-up comedies the comedy stars of these popular show. Watch the complete celebration with the Stars of Vijay television in Vijay Kudumbam at 6 pm. Vijay stars from various fictions like Neeli, Saravanan Meenakshi, Mapilllai, Lakshmi Kalyanam and Pagal ilavu are coming together to entertain the viewers with fun games, challenges, Dance performances and many more. M S Dhoni- The untold story, the movie starring Sushant Singh Rajput, is the journey of young MS Dhoni from a young cricketer to being the captain of the Indian cricket team. It encompasses the life of Dhoni’s journey from ticket collector to trophy collector. So, for all the dhoni fans out there who have missed to watch the movie last time, don't miss to watch this blockbuster biopic in Star Vijay television at 8 pm. Give a fresh start to this new year by watching all exciting programs of Vijay TV.  

Tags: vijay tv

Share via: