வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் - முன்னோட்டம்

Release Date:24 May 2016
எழில்மாறன் புரொடெக்க்ஷன், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’. விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை கதை, திரைக்கதை, எஸ்.எழில் இயக்கியுள்ளார். கிருஷ்ணாபுரம் தொகுதி எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனின் விசுவாசி, நம்பிக்கை மற்றும் அவருக்கு சகலமுமாக இருக்கிறார் டெய்லரான முருகன். மந்திரி பதவிக்காக ஆசைப்படும் அதே கட்சியின் வேறொரு தொகுதி எம்.எல்.ஏ-வான மருதமுத்து, தன்னுடைய போட்டியாளரான ஜாக்கெட் ஜானகிராமனை சந்தர்ப்பம் பார்த்து தீர்த்து கட்டவும் முடிவு செய்கிறார். இது ஒரு புறம் இருக்க ஊர்விட்டு ஊர் வந்து ஹோட்டல் கடை நடத்தும் ராஜாமணி, எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனிடம் முருகனுக்கு இருக்கும் செல்வாக்கை கேள்விப்பட்டு தன் மகள் அர்ச்சானாவின் போலிஸ் வேலைக்காக லஞ்சமாக ரூபாய் இருபத்தைந்து லட்சம் பணத்தை முருகனிடம் தருகிறார். பணத்தை வாங்கும் முருகன் பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக தான் ஒரு தலையாக காதலிக்கும் பெண்ணின் தகப்பனே தன் மகள் வேலைக்காக தன்னிடம் நாடி வந்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது போலீஸ் வேலை வாங்கி கொடுத்து தன் காதலியை அடைய வேண்டும் என்று நினைக்கிறார். அந்தப் பணத்தை உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் மந்திரியை பார்பதற்காக சென்னைக்கு கிளம்பி கொண்டிருக்கும் எம்.எல்.ஏ ஜாக்கெட் ஜானகிராமனிடம் விவரம் சொல்லி கொடுக்க, அவரும் டி.ஜி.பியை நேரில் சந்தித்து வேலையை கச்சிதமாக முடிக்கிறேன் என்று சென்னைக்கு செல்கிறார். சென்ற இடத்தில் அவருக்கு என்ன ஆனது ?, மந்திரியையும் , டி.ஜி.பியையும் ஜாகெட் ஜானகிராமன் சந்தித்தாரா இல்லையா ?, அர்ச்சானவுக்கு வேலை கிடைத்ததா, இல்லையா ?, முருகனின் காதல் என்னவாயிற்று என்பதுதான் இப்படத்தின் நகைச்சுவை கலந்த மீதிக் கதை. முருகனாக விஷ்ணு விஷால் , அர்ச்சனாவாக நிக்கி கல்ராணி, ஜாக்கெட் ஜானகிராமனாக ரோபோ ஷங்கர், மருதமுத்துவாக நரேன், ராஜாமணியாக ஞானவேல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளார். வருகிற ஜூன் 3ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகிறது. இசை - சி.சத்யா ஒளிப்பதிவு - சக்தி வசனம் - எழிச்சூர் அரவிந்தன், ஜோதி அருணாச்சலம் பாடல்கள் யுகபாரதி கலை - யு.ஜே.முருகன் படத்தொகுப்பு - ஆனந்தலிங்க குமார் நடனம் - தீனா சண்டை - Fire கார்த்திக் தயாரிப்பு நிர்வாகம் - சங்கர் தாஸ் மக்கள் தொடர்பு - ரியாஸ் கே அகமது டிசைன் - 24AM நிழற்படம் - ரவி ராம் தயாரிப்பு - விஷ்ணு விஷால் , ரஜினி நட்ராஜ்.

Share via: