ஹன்சிகாவின் 50வது படம் ‘மஹா’

Release Date:13 Aug 2018
தமிழ்த் திரையுலகத்தில் ‘மாப்பிள்ளை’ படம் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ள ஹன்சிகாவின் 50வது படத்திற்கு ‘மஹா’ எனப் பெயரிட்டுள்ளனர். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பாக மதியழகன் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஜமீல் இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் ஒரு கிரைம் திரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளது. படம் பற்றி தயாரிப்பாளர் மதியழகன் கூறியதாவது, ஹன்சிகா நடித்த இரண்டு படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஜமீல் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தின் கதை ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவில் அமைந்துள்ளது. அந்தக் கதைக்குப் பொருத்தமானர் ஹன்சிகா தான் என இயக்குனர் ஆணித்தரமாக நம்பினார். அதுதான் சரியானது என்று நானும் நம்பினேன். எங்களது நிறுவனத்தின் சார்பில் தயாராகும் படங்கள் தரமாக இருக்க வேண்டும் என தீர்மானித்திருக்கிறேன். அதற்கு ‘மஹா’ படமும் ஒரு உதாரணமான அமையும்,” என்கிறார்.

Share via: