கமல்ஹாசன் - சந்திரபாபு நாயுடு சந்திப்பு

Release Date:12 Nov 2015
நடிகர் கமல்ஹாசன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை இன்று சந்தித்துப் பேசினார். இது தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சீகட்டி ராஜ்ஜியம்’ பிரிமீயர் காட்சி தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றது. விஜயவாடாவில் நடைபெற உள்ள எங்களது திரைப்படத்தின் பிரிமீயர் காட்சி அனுமதிக்காகவும், அதைப் பார்க்க அவருக்கு அழைப்பு விடுக்கவும் அவரைச் சந்தித்தேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். சீகட்டி ராஜ்ஜியம் படத்தின் பிரிமீயர் காட்சிகளை ஹைதராபாத் மற்றும் விஜயவாடாவில் ஒரே நாளில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இரண்டு பிரிமீயரிலும் நான் கலந்து கொள்ள முயற்சி செய்து வருகிறேன். இரண்டு காட்சிகளுக்கும் இடையே பயணம் செய்வதற்காக ஆறு மணி நேர இடைவெளி இருக்கும்,” என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘தூங்காவனம்’ படம் தெலுங்கில் ‘சீகட்டி ராஜ்ஜியம்’ என்ற பெயரில் இம்மாதம் 20ம் தேதி வெளியாக உள்ளது.  

Share via: