ரஜினிகாந்த், கமல்ஹாசன் வெற்றிக்குக் காரணமான பஞ்சு அருணாச்சலம்
Release Date | : | 09 Aug 2016 |
தமிழ்த் திரையுலகத்தில் இசை என்றாலே இளையராஜா என்று சொல்ல வைத்த பெருமை ‘அன்னக்கிளி’ படத்தின் தயாரிப்பாளரான மறைந்த பஞ்சு அருணாச்சலத்திற்கு உண்டு.
‘அன்னக்கிளி’ படம் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாச்சலம் இன்று காலை உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்.
தமிழ்த் திரையுசை உலகல் மறக்க முடியாத எண்ணற்ற பாடல்களை எழுதிய கண்ணதாசனிடம் பல படங்களுக்கு உதவியாளராகப் பணியாற்றி, பாடலாசிரியராக அறிமுகமாகி, பின்னர் கதையாசிரியராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்தவர்.
‘மணமகளே மணமகளே வா...வா..உன் வலது காலை எடுத்து வைத்து வா..வா...‘ என்று இன்றும் திருமண நிகழ்வுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடலை எழுதியவர்.
தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது, இந்தியத் திரையுலகத்திலும் ஆளுமையுடன் இருக்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் எண்ணற்ற படங்களுக்கு கதை எழுதி அவர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற காரணகர்த்தாவாகவும் விளங்கியவர் பஞ்சு அருணாச்சலம்.
பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி ரஜினிகாந்த் நடித்த படங்கள்..
புவனா ஒரு கேள்விக்குறி
பிரியா
ஆறிலிருந்து அறுபது வரை
எங்கேயோ கேட்ட குரல்
முரட்டுக் காளை
கழுகு
போக்கிரி ராஜா
பாயும் புலி
அடுத்த வாரிசு
தம்பிக்கு எந்த ஊரு, மனிதன்
தர்மத்தின் தலைவன்
குரு சிஷ்யன்
ராஜாதி ராஜா
ராஜா சின்ன ரோஜா
அதிசயப் பிறவி
தர்மதுரை
பாண்டியன்
வீரா
பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி கமல்ஹாசன் நடித்த படங்கள்
கல்யாணராமன்
உல்லாசப் பறவைகள்
மீண்டும் கோகிலா
எல்லாம் இன்ப மயம்
சகலகலா வல்லவன்
தூங்காதே தம்பி தூங்காதே
ஜப்பானில் கல்யாணராமன்
உயர்ந்த உள்ளம்
அபூர்வ சகோதரர்கள்
சிங்காரவேலன்
இளையராஜா இசையில் பல ஹிட்டான பாடல்களை எழுதியுள்ளவர் பஞ்சு அருணாச்சலம்.
குறைவான படங்களை மட்டுமே இயக்கியுள்ள பஞ்சு அருணாச்சலம் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருக்கு மட்டும் வெற்றிகளைத் தேடித் தரவில்லை, இன்னும் பலருக்கும் மிகப் பெரிய வெற்றிகள் கிடைக்கக் காரணமாக அமைந்தவர்.
தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் அவருடைய பங்கு மகத்தானது, மறக்க முடியாதது...