பிளஸ் 2 படிக்கும் தங்கை, பெற்றோர் ஆகியோருடன் சென்னையில் வசித்து வருகிறார் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கலையரசன். தங்கை பிளஸ் 2 வில் நல்ல மார்க் எடுத்தாலும் அரசு மருத்துவக் கல்லூரியில் கட்-அப்-ஆல் இடம் கிடைக்காமல் போய்விடுகிறது. தங்கையின் டாக்டர் ஆசையை நிறைவேற்ற தனியார் கல்லூரியில் நன்கொடை கொடுத்து சீட் வாங்குகிறார் கலையரசன். பணத்தைக் கொடுத்த பின்தான் அந்தக் கல்லூரிக்கு அங்கீகாரம் ரத்தான விவரம் அவருக்குத் தெரிய வருகிறது. பணத்தை வாங்கிய இடைத் தரகர் மூலம் மீண்டும் பணத்தைப் பெறும் முயற்சியில் இறங்குகிறார் கலையரசன். எதிர்பாராத விதமாக தங்கை விபத்தில் இறக்க, அதற்குக் காரணமானவர்களைப் பழி வாங்கப் புறப்படுகிறார் கலையசரன். அதன் பின் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.