கொலைகார குப்பத்தில் உள்ளவர் சிவகார்த்திகேயன். அந்தப் பகுதி மக்களுக்காக அவருடைய சொந்த முயற்சியில் ஒரு எஃப்எம் வானொலியை ஆரம்பிக்கிறார். அதற்காக அவர்களது குப்பத்து ரவுடியான பிரகாஷ்ராஜிடம் கஷ்டப்பட்டு அனுமதி வாங்குகிறார். தன் குப்பத்து இளைஞர்கள் பலருக்கு பிரகாஷ்ராஜிடம் அடியாளாக சேர்ந்து ரவுடியாக வேண்டும் என்ற ஆசை இருப்பதை அறிந்து, அவர்களை நல்வழிப்படுத்த நினைக்கும் குணம் கொண்டவர். அதற்காக அவர்களுக்கு வானொலி வழியே ஆலோசனை சொல்லி வம்பில் சிக்கிக் கொள்கிறார். சிவகார்த்திகேயனை பிரகாஷ்ராஜிடம் சிலர் போட்டுக் கொடுத்து விடுகிறார்கள். அவர் நடத்தி வந்த வானொலியை மூடிவிட்டு, ஒரு கம்பெனியில் மார்க்கெட்டிங் வேலையில் சேர்கிறார் சிவகார்த்திகேயன்.
அங்கு அவருக்கு மேல் அதிகாரியாக இருக்கம் பகத் பாசிலிடம் மார்க்கெட்டிங் பற்றிய நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்கிறார். பிரகாஷ்ராஜிடம் வேலை பார்த்து வந்த அவருடைய நண்பர் விஜய் வசந்த்தை, அவருடைய கம்பெனியிலேயே வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஒரு நாள், விஜய் வசந்தை பிரகாஷ்ராஜ் கொலை செய்துவிடுகிறார். அதைத் தடுக்க முயலும் சிவகார்த்திகேயன், பிரகாஷ்ராஜையும் குத்தி விடுகிறார். அப்போது பிரகாஷ்ராஜ், விஜய் வசந்தை கொலை செய்யச் சொன்னதே அவருடைய கம்பெனி முதலாளிதான் என அதிர்ச்சியைத் தருகிறார். விஜய் வசந்தின் கொலையில் உள்ள பின்னணியைக் கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறார் சிவகார்த்திகேயன். அப்போதுதான் சினேகா மூலம் அவருக்கு பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகிறது. அதைத் தொடர்ந்து அவருடைய கம்பெனியையும் வேறு சில கம்பெனிகளையும் எதிர்த்து தொழிலாளிகளை ஒன்று சேர்த்து போராட்டத்தில் குதிக்கிறார். அவருடைய போராட்டத்திற்கு பலன் கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
Director – Mohan Raja
Music – Anirudh Ravichander
Starring – Sivakarthikeyan, Nayanthara, Fahadh Faasil, Prakash Raj, Sneha, RJ Balaji, Sathish, Vinodhini Vaidyanathan, Robo Shankar, Vijay Vasanth, Thambi Ramaiah, Rohini, Charle, Ramdoss, Kaali Venkat, Aruldoss,,Mime Gopi, Mansoor Ali Khan, Y. G. Mahendra, Madhusudhan Rao, Uday Mahesh, Sharath Lohitashwa, Anish Kuruvilla, Mahesh Manjrekar, Balaji Venugopal
Director – Mohan Raja
Music – Anirudh Ravichander
Cinematography – Ramji
Editor – Ruben
Lyrics: Viveka, Madhan Karky and Vivek
Producer – R D Raja
Studio – 24AM Studios Private Limited
Music Label – Sony Music Entertainment India Pvt. Ltd.
Velaikkaran – Censor Certificate