பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனான சுரேந்தர் பல இளம் பெண்களுடன் ஜாலியாக ஊரைச் சுற்றித் திரிந்து கொண்டிருப்பவர். ஒரு நாள் அவரை யாரோ கடத்தி விட்டு, சவப் பெட்டி ஒன்றில் அடைத்து விடுகிறார்கள். அந்தப் பெட்டியில் உள்ள ஒரு மொபைன் போனில் அவரை யாரோ ஒருவர் மிரட்டுகிறார். அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், சுரேந்தர் அவருடைய ஆணுறப்பை அறுத்துக் கொடுத்தால் மட்டுமே உயிருடன் வெளியில் விடுவதாக மிரட்டுகிறார்.
இதனிடையே, சுரேந்தரின் பெற்றோரான நிழல்கள் ரவி, சுதா காவல் துறையினரிடம் புகார் தெரிவிக்க, அந்தப் புகாரை காவல் துறை அதிகாரியான ரகுமான் விசாரிக்க ஆரம்பிக்கிறார். சுரேந்தரை யார், எதற்காக கடத்தி வைத்துள்ளார்கள் என்பதை அவர் கண்டு பிடித்தாரா, இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.
நடிகர்கள், நடிகைகள்
ரகுமான், கௌரி நந்தா, அகில், நிழல்கள் ரவி, சுரேந்தர், மோனிகா, ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ, சுதா, சிசர் மனோகர், சுப்புராஜ், கோவை செந்தில், ‘சாட்டை’ ரவி, ‘பாய்ஸ்’ ராஜன்.
தொழில் நுட்ப கலைஞர்கள்
இசை : கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு : கிருஷ்ணசாமி
எடிட்டர் : கே.ஸ்ரீனிவாஸ்
பாடலாசிரியர்கள் : கார்த்திக் ராஜா, விஜய் சாகர்
கலை : சண்முகம்
நடனம் : ராஜ்விமல்
மக்கள் தொடர்பாளர் : இரா. குமரேசன்
தயாரிப்பாளர்கள் : குமார் டி.எஸ், கே.ராமராஜ், டி.சுபாஷ் சந்திரபோஸ், ஏ.குணசேகர்
இயக்குனர் : ராம் கே.சந்திரன்
தயாரிப்பு : மரம் மூவிஸ் மற்றும் பரணி மூவிஸ்
வெளியீடு : V.T. சினிமாஸ்