காவல் துறையில் உதவி ஆணையராக இருப்பவர் அருண் விஜய். ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் நடக்கும் இரு கொலைகளைப் பற்றி விசாரிக்க ஆரம்பிக்கிறார். அடுத்து ஒரு பெண்ணும், அருண் விஜய்யின் அண்ணியும் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அடுத்தடுத்து பெண்களாக அதுவும் ஒரு மருத்துவமனையில் குழந்தைப் பேறுக்காக சிறப்பு சிகிச்சை பெற்று வருபவர்கள் இறப்பது அருண் விஜய்க்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதில் இருக்கும் மர்மத்தைக் கண்டுபிடித்து இறந்த பெண்கள் எப்படி இறந்தார்கள் என்பதை அருண் விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் மீதிக் கதை.