சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். சென்னையின் பிரபல தாதாவான மைம் கோபியின் வீட்டிலிருந்து திருடப்படும் அதிர்ஷ்ட வாஸ்து மீன், சிபிராஜிற்குத் திருமணப் பரிசாக, அவரது தோழி சாந்தினியால் சிபி வீட்டிற்கு வந்து சேருகிறது. தன்னுடைய அதிர்ஷ்ட மீனை மைம் கோபி, ஆட்களை வைத்து தேடிக் கொண்டிருக்கிறார். அதே சமயம், சிபிராஜின் வீட்டிற்குள் மூன்று ரவுடிகள் நுழைந்து நான்கு கோடி ரூபாய் பற்றி சிபிராஜிற்குத் தெரிந்த உண்மை பற்றி கேட்டு மிரட்டி, அந்த வீட்டிலேயே தங்கிக் கொள்கிறார்கள். அவர்களிடமிருந்து சிபிராஜ், ஐஸ்வர்யா எப்படி தப்பித்தார்கள், காணாமல் போன வாஸ்து மீனை மைம் கோபி கண்டு பிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.