ஒரு பைக் ஷோரூமில் வேலை பார்க்கும் கே.ஜிக்கும், ஒரு பத்திரிகையில் வேலை பார்க்கும் அதுல்யாவும் நண்பர்களாகப் பழகி காதலர்கள் ஆகிறார்கள். அதுல்யா கோவையிலிருந்து பொள்ளாச்சிக்கு மாற்றலாகிச் செல்கிறார். அங்கு அவருடன் வேலை பார்க்கும், அனிருத் அதுல்யாவைக் காதலிப்பதாகச் சொல்கிறார்.
ஒரு சந்தர்ப்பத்தில் அதுல்யா, அனிருத் இருவரும் பழகுவதைப் பார்த்த கே.ஜி அதுல்யா மீது கோபம் கொள்கிறார். இதனால், கே.ஜி, அதுல்யா காதலுக்கிடையே குழப்பம் உண்டாகிறது. இந்த குழப்பம் நீடிக்கிறதா, முடிவுக்கு வருகிறதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.