சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக வேண்டும் என்ற ஆர்வத்தில் இருக்கிறார் கோகுல் ஆனந்த். ஒரு தயாரிப்பாளரால் ஏமாற்றத்தைச் சந்திக்கும் அவர் நண்பனின் உதவியால், சிங்கப்பூருக்கு ஒரு தயாரிப்பாளரைச் சந்தித்து கதை சொல்லப் போகிறார். போன இடத்தில் தயாரிப்பாளரைச் சந்திக்க முடியாமல் விதி, அவருக்கு சதி செய்கிறது. பாஸ்போர்ட்டையும் தொலைத்து விடுகிறார், பணத்தையும் பறி கொடுக்கிறார். அதன் பின் அங்கு ஒரு டிவியில் ஒளிப்பதிவாளராக வேலை பார்க்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் , கோகுல் ஆனந்திற்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவரது தயவால் வேறொரு தயாரிப்பாளரையும் சந்திக்கிறார். அந்த சமயத்தில் கோகுலுக்குள் காதல் மலர்கிறது. அதனால், சில பிரச்சனைகளும் வருகிறது. அதிலிருந்து மீண்டும் படம் இயக்கினரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.