ஈரான் நாட்டைச் சேர்ந்த இயக்குனர் மஜித் மஜிதி தற்போது பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டர், மலையாள நடிகை மாளவிகா மோகனன், பழம் பெரும் நடிகை ஜி.வி. சாரதா ஆகியோர் நடிக்கும் ‘பியான்ட் த கிளவுட்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஹிந்தியில் மட்டுமே எடுக்க முடிவு செய்யப்பட்ட இந்தப் படத்தைத் தற்போது தமிழிலும் உருவாக்க உள்ளார்கள்.

இந்தியாவைக் கதைக் களமாகக் கொண்டுள்ள இந்தப் படத்தை உலக அளவில் வெளியிட ஆங்கிலத்திலும் எடுக்க உள்ளார்கள்.

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்தப் படம் தமிழில் தனியாகவே டப்பிங் செய்யப்பட உள்ளது. ‘பாகுபலி 2’ படம் போல தெலுங்கில் எடுத்துவிட்டு தமிழிலும் எடுத்திருக்கிறோம் என பொய் சொல்லப் போவதில்லை.

உலகப் புகழ் வாய்ந்த இயக்குனர் மஜித் மஜிதி தமிழிலும் படம் இயக்குவது திரைப்பட ரசிகர்களுக்கு கொண்டாட்டமான விஷயம்தான்.

Leave a Reply