விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த ‘மதுர வீரன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேரளாவைச் சேர்ந்த மீனாட்சி.

கிராமத்துப் பெண்ணாக படத்தில் யதார்த்தமாக நடித்து விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். தொடர்ந்து தமிழிலிருந்து பலரும் அழைப்பு விடுத்தும் ‘ப்ளஸ் ஒன்’ பரீட்சை எழத வேண்டியிருந்ததால் அந்த வாய்ப்புகளை அவரால் பயன்படுத்த முடியவில்லையாம்.

‘நான் ரொம்ப சின்ன பொண்ணு, எனக்கு சினிமாவில் சாதிக்க இன்னும் நிறைய டைம் இருக்கு. ‘மதுர வீரன்’ படத்தில் என் நடிப்புக்கு நிறைய பாராட்டுக்கள் கிடைத்த போதிலும் அதன் பிறகு என்னைத் தேடி வந்தது எல்லாமே மெட்சூரிட்டியான கிராமிய கதாநாயகி வேடங்கள். அதனால் இளமையான மாடர்ன் வேடங்களிலும் நடித்து எனது திறமைய நிரூபிக்க உதவும் ஒரு கதாபாத்திரத்திற்காகக் காத்திருக்கிறேன். என் நடிப்பை இன்னும் வளர்த்துக கொள்ள விடுமுறையில் நனடம் கற்று வருகிறேன். நல்ல நடிகை என்று தமிழ் சினிமாவில் பெயரும் புகழும் பெற வேண்டும் என்பது தான் எஎனது ஆசை,” என தமிழிலேயே நம்பிக்கையாகப் பேசுகிறார் மீனாட்சி.

மலையாள நடிகைகளால் நிறைந்திருக்கும் தமிழ் சினிமாவில் மீனாட்சிக்கும் ஒரு இடம் கிடைக்காதா என்ன ?.