தியா மூவிஸ் சார்பாக பிரதீப் தயாரிக்க, ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், சைமன் கே கிங் இசையமைப்பில், அர்ஜுன், விஜய் ஆண்டனி, அஷிமா நர்வால் மற்றும் பலர் நடித்து ஜுன் 7ம் தேதி வெளிவந்த படம் கொலைகாரன்.

இப்படத்தை போப்டா மீடியா ஒர்க்ஸ் சார்பில் தனஞ்செயன் வெளியிட்டுள்ளார்.

ஒரு பரபரப்பான த்ரில்லர் படமாக வெளிவந்துள்ள இப்படத்தை அனைத்து விமர்சகர்களும் பாராட்டிதான் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்கள்.

அர்ஜுன், விஜய் ஆண்டனி முதல்முறையாக இணைந்து நடித்துள்ள படம். 2012ம் ஆண்டில் வெளிவந்த ‘லீலை’ என்ற படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் ஒரு இடைவெளிக்குப் பிறகு ஒரு தரமான படத்தின் மூலம் தனி முத்திரை பதித்துள்ளார்.

ஒரு கொலையை செய்ததாக வந்து தானாகவே சரண்டர் ஆகிறார் விஜய் ஆண்டனி. ஆனால், அவர் அந்தக் கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என வேறு கோணத்தில் விசாரிக்கிறார் காவல் துறை அதிகாரி அர்ஜுன். உண்மையான கொலைகாரன் யார் என்பதை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

நாம் சிறிதும் எதிர்பார்க்காத விதத்தில் அடுத்தடுத்து திரைக்கதையில் பல முடிச்சுகளுடன் நகரும் இப்படம் ரசிகர்களின் ரசனைக்குரிய படமாக அமைந்திருக்கிறது.

விஜய் ஆண்டனிக்கு ‘பிச்சைக்காரன்’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு திருப்புமுனையைக் கொடுத்துள்ள படமாக இந்த ‘கொலைகாரன்’ அமைந்துள்ளது.

TMDB Rating – 7.5/10