உண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக தனுஷ் தயாரிக்க, பா. ரஞ்சித் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் படம் ‘காலா’.

ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இப்படம் முதலில் ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திரையுலகத்தில் நடந்த வேலை நிறுத்தம் காரணமாக படம் எப்போது வெளியாகும் என்று தெரியாமல் இருந்தது.

ஸ்டிரைக் முடிந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், ‘காலா’ பட வெளியீடு பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, அதை அப்படத்தின் தயாரிப்பாளர்தான் அறிவிப்பார் என்றார்.

27ம் தேதிக்கு இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில் படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், ‘காலா’ படம் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

ஜுன் மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கும் சமயத்தில் இப்படத்தின் வெளியீட்டை வைத்திருப்பது ஆச்சரியமாக உள்ளது.