தனுஷின் உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், ரஜினிகாந்த், சமுத்திரக்கனி, ஹுமா குரேஷி மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘காலா’.

இப்படம் ஸ்டிரைக்கிற்கு முன்பாக ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின், படத்தின் வெளியீடு பற்றி பல்வேறு விதமான செய்திகள் வெளிவந்தன.

தற்போது நடந்து வரும் ஸ்டிரைக் மிகவும் தீவிரமாக உள்ளதால், ‘காலா’ திட்டமிட்டபடி ஏப்ரல் 27ம் முதல் வெளிவர வாய்ப்பில்லை. இதனிடையே, படத்திற்கான சென்சார் வேலைகள் நடந்து முடிந்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

படத்திற்கு சில ‘கட்’டுகளுடன் யு/எ சான்றிதழ் கொடுத்துவிட்டார்கள் எனத் தகவல். ஆனால், தயாரிப்பு தரப்பில் அது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.