2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சூர்யா தயாரிக்க ஜோதிகா நடித்த ‘36 வயதினிலே, மகளிர் மட்டும்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது உருவாகி வரும் படம் ‘ஜாக்பாட்’.

பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி நடித்த, ‘குலேபகாவலி’ படத்தை இயக்கிய கல்யாண் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் ஜோதிகா கதையின் நாயகியாக நடிக்க ரேவதி, யோகிபாபு, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், மொட்டை ராஜேந்திரன், ஜெகன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

கல்யாண் இயக்கிய ‘குலேபகாவலி’ படம் போலவே ‘ஜாக்பாட்’ படமும் காமெடிப் படம்தான்.

இப்படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்ய, விஜய் படத் தொகுப்பை கவனிக்க, விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளார்.

2டி எண்டெர்டெயின்மெண்ட்-ன் 11வது தயாரிப்பு ‘ஜாக்பாட்’ படம்.

இன்று இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளது.