சுந்தர்ராவ் நட்கர்னி இயக்கத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஆர்.ராஜகுமாரி மற்றும் பலர் நடித்து 1944ம் ஆண்டு அக்டோபர் 16 தீபாவளி தினத்தன்று வெளிவந்த படம் ‘ஹரிதாஸ்’.

சென்னை – சன் தியேட்டரில் இந்தப் படம் 1945ம் ஆண்டைக் கடந்து 1946ம் ஆண்டு தீபாவளி வரை ஓடியது. மூன்று தீபாவளியைக் கண்ட படம் என்ற பெருமையைப் பெற்றது.

ஜி.ராமனாதன் இசையயில் 20 பாடல்கள் படத்தில் இடம் பெற்றிருந்தன.

எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ…’, ‘காயாத கானகத்தே…’ ஆகிய பாடல்கள் இன்றும் பிரபலமாக விளங்கி வருகின்றன.

‘ஹரிதாஸ்’ படம் புரிந்த மூன்று வருட தீபாவளி சாதனையை வேறு எந்தத் தமிழ்ப் படமும் இதுவரை முறியடிக்கவில்லை.

Leave a Reply