தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம் ‘காளிதாஸ்’. 1931ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியவர் எச்.எம்.ரெட்டி.

இப்படத்தில் பி.ஜி.வெங்கடேசன் நாயகனாகவும், டி.பி.ராஜலட்சுமி நாயகியாகவும் நடித்திருந்தனர்.

படத்தின் நாயகன் தமிழில் பேசி நடிப்பார். நாயகி டி.பி.ராஜலட்சுமி தெலுங்கில் பேசி நடிப்பார். சில கதாபாத்திரங்கள் ஹிந்தியிலும் பேசி நடித்தார்கள்.

சென்னையில் சினிமா சென்டிரல் என்ற தியேட்டரில் இப்படத்தின் முதல் காட்சி 1931ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி திரையிடப்பட்டது.

Leave a Reply