நாளை பிப்ரவரி 24ம் தேதியன்று விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் மற்றும் பலர் நடித்துள்ள ‘யமன்’, கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், நெப்போலியன் மற்றும் பலர் நடித்துள்ள ‘முத்துராமலிங்கம்’, புதுமுகம் அருண் சிதம்பரம், ஜியா சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள ‘கனவு வாரியம்’ ஆகிய மூன்று படங்கள் வெளியாக உள்ளன.

ராகவா லாரன்ஸ், நிக்கி கல்ரானி, சத்யராஜ் மற்றும் பலர் நடிக்க, நாளை வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாக உள்ள மூன்று படங்களில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ‘யமன்’ படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

எமன்

இயக்கம் – ஜீவா சங்கர்

இசை – விஜய் ஆண்டனி

நடிப்பு – விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் மற்றும் பலர்

முத்துராமலிங்கம்

இயக்கம் – ராஜதுரை

இசை – இளையராஜா

நடிப்பு – கௌதம் கார்த்திக், பிரியா ஆனந்த், நெப்போலியன் மற்றும் பலர்

கனவு வாரியம்

இயக்கம் – அருண் சிதம்பரம்

இசை – ஷியாம் பெஞ்சமின்

நடிப்பு – அருண் சிதம்பரம், ஜியா சங்கர், யோக் ஜபி மற்றும் பலர்

Leave a Reply