மே 1, 2019ல் வெளிவந்த படம் ‘தேவராட்டம்’.

முத்தையா இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், கௌதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி மற்றும் பலர் நடித்திருக்கும் படம்.

பெண்களைத் துன்புறுத்துபவர்களைக் கருவறுக்க வேண்டும் என்ற கதையுடன் வெளிவந்துள்ள படம்.

குடும்ப உறவுகளின் உயர்வை சொல்லும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

கூட்டு குடும்பத்தின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் படமாகவும், உறவே சுகமே அதுவே வரமே என நெகிழ வைக்கும் படமாகவும் அமைந்துள்ளது.

நிவாஸ் கே பிரசன்னா இசையில் ‘மதுரை பளபளக்குது’ பாடல் பட்டையைக் கிளப்புகிறது.

அக்கா, தம்பியின் பாசக் கதை பெண்களையும் கவரும். எதிர்மறையான விமர்சனங்களையும் மீறி ரசிகர்களின் வரவேற்பை இந்தப் படம் பெற்றிருக்கிறது.

TMDB Rating – 6/10