மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம், சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’.

மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள இந்தப் படத்தில் அரவிந்த்சாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூர் அலிகான், ஜெயசுதா, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்தில் நடித்த சிம்பு-வால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டது என அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். அதைத் தொடர்ந்து மணிரத்னம் படத்தில் நடிப்பதற்கு சிக்கல் வரலாம் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால், அப்படி எந்த ஒரு நடவடிக்கையையும் சிம்பு மீது தயாரிப்பாளர் சங்கம் எடுக்கவில்லை என்று தெரிகிறது. சிம்பு, மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளதன் மூலம் அது நிரூபணம் ஆகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் இத்தனை முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பது இதுவே முதல் முறை.

‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 12ம் தேதி ஆரம்பமாக உள்ளது.

இசை – A.R.ரஹ்மான்
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து
கலை – ஷர்மிஷ்டா ராய்
உடைகள் வடிவமைப்பு – ஏகா லகானி
சண்டைப்பயிற்சி – திலிப் சுப்பராயன்
ஒலிப்பதிவு – ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி
ஒப்பனை – சிகை அலங்காரம் – செரினா டிக்ஸேரா
ஸ்டில்ஸ் – C.H.பாலு
மக்கள் தொடர்பு – நிகில்
டிசைன்ஸ் – கோபி பிரசன்னா
லைன் புரொட்யுசர் – K.சின்னதுரை
கிரியேடிவ் புரொட்யுசர் – கிரண் & பிஜாய் நம்பியார்
நிர்வாக தயாரிப்பாளர் – சிவா அனந்த்
எழுத்து – மணி ரத்னம் & சிவா அனந்த்
தயாரிப்பு – மணி ரத்னம் & சுபாஸ்கரன்
இயக்கம் – மணி ரத்னம்

Leave a Reply