எம் 10 புரொடக்ஷன் தயாரிப்பில், ஜெகதீசன் சுபு இயக்கத்தில், இமான் இசையமைப்பில், விக்ராந்த், வசுந்தரா மற்றும் பலர் நடிக்கும் படம் பக்ரீத்.

தமிழ் சினிமாவில் இதுவரை ஒட்டகத்தை வைத்து எந்தப் படமும் வந்ததில்லை.

இந்தப் படத்திற்காக ராஜஸ்தானிலிருந்து ஒட்டகங்களை வரவழைத்து பல தடங்கல்களுக்குப் பிறகுதான் இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்.

அன்புக்கும், பாசத்திற்கும் தமிழ் மக்கள் அடிமையானவர்கள். அதை அவர்கள் விலங்குகள் மீதும் காட்டுவார்கள் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஆடு, மாடு என அவர்கள் வீட்டில் வளர்க்கும் விலங்குகள் மீதும் அவர்கள் வைத்திருக்கும் பாசம் தனிப்பட்ட ஒன்று.

எங்கிருந்தோ வந்த ஒரு ஒட்டகத்தின் மீது ஒரு விவசாயக் குடும்பம் வைத்திருக்கும் பாசம்தான் இந்த ‘பக்ரீத்’ படத்தின் கதை.

தன் யதார்த்த நடிப்பால் படம் முழுவதும் நம்மை நெகிழ வைக்கிறார் விக்ராந்த். அவருக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும்.

நெகிழ வைக்கும் காட்சிகளுடன் நம்மை ஆரம்பம் முதல் கடைசி வரை ரசிக்க வைக்கும் படமாக இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஜெகதீசன் சுபு.

தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு படத்தைக் கொடுத்ததற்காக அவருக்குப் பாராட்டுக்கள்….