‘பாகுபலி 2’ – 40 நாள் தமிழ்நாடு வசூல் எவ்வளவு ?
- By cpadmin
- Category: News
- No comment
- Hits: 798
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த ‘பாகுபலி 2’ படம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
உலக அளவில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த இந்தப் படம் இதுவரையில் சுமார் 1650 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் சுமார் 135 கோடியை வசூலித்துள்ளது. தமிழ்நாடு உரிமை சுமார் 47 கோடிக்கு வாங்கப்பட்டது. இதர செலவுகள் போக நிகர வசூலாக சுமார் 115 கோடி கிடைக்கும். அதில் வினியோகஸ்தர்களின் பங்காக சுமார் 75 கோடி வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், இதுவரை தமிழ்நாடு வசூலைப் பற்றி படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.