மே 10ம் தேதி ‘கீ, உண்மையின் வெளிச்சம், வேதமானவன், எங்கு சென்றாய் என் உயிரே’ ஆகிய படங்களும் மே 11ம் தேதி  ‘100, அயோக்யா’ ஆகிய படங்களும் வெளிவந்தன.

இந்தப் படங்களில் ரசிகர்களின் வரவேற்பையும், விமர்சகர்களின் வரவேற்பையும் பெற்ற படமாக ‘அயோக்யா’ படம் இருக்கிறது.

தெலுங்கில் 2015ம் ஆண்டில் வெளிவந்த ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்தான் ‘அயோக்யா’. ஹிந்தியிலும் இந்தப் படத்தை ‘சிம்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்து பெரிய வசூலைக் குவித்தார்கள்.

போலீஸ் கதாபாத்திரத்தில் விஷால், வில்லன் கதாபாத்திரத்தில் பார்த்திபன், நாயகியாக ராஷி கண்ணா, சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோரது நடிப்பு இந்தப் படத்திற்கு பிளஸ் பாயின்ட்.

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் ஒரு பரபரப்பான ஆக்ஷன் படத்தை தமிழ் ரசிகர்களுக்குத் தகுந்தபடி கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

ஒரு முழுமையான ஆக்ஷன் படமாக இருந்தாலும் பெண்கள் மீதான பாலியல் குற்றம் புரிபவர்களுக்கு உடனடியாக தண்டனை கொடுக்க வேண்டும் என்ற கருத்தைச் சொன்னதற்காக இந்தப் படத்தைப் பாராட்ட வேண்டும்.

TMDB Rating – 6.5/10