தேசிய விருது பெற்ற ‘ஆரண்ய காண்டம்’ படத்தை இயக்கிய தியாகராஜன் குமார ராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா மற்றும் பலர் நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராமலேயே ‘அநீதிக் கதைகள்’ என்று பெயர் வைத்ததாகச் சொல்லப்படும் இந்தப் படத்தில் சமந்தா நடித்துள்ள இரண்டு காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

ஒரு புகைப்படத்தில் சமந்தா கையில் கத்தியுடன் படுத்திருக்கும் ஒருவரை கொல்ல முயற்சிப்பது போன்ற ஒரு புகைப்படமும், சமந்தா நடிக்கும் மற்றொரு காட்சியின் புகைப்படமும் பரவி வருகின்றன.

யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்திற்கு சீனியர் ஒளிப்பதிவாளரான பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Leave a Reply