மாடர்ன் தியேட்ர்ஸ் தயாரிப்பில் டி.ஆர். சுந்தரம் இயக்கத்தில் எம்ஜிஆர், பானுமதி, பிஎஸ். வீரப்பா மற்றும் பலர் நடிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி வெளிவந்த ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படம்தான் தென்னிந்தியாவின் முதல் முழு நீள வண்ணத் திரைப்படம்.

கருப்பு வெள்ளையில் படங்களைப் பார்த்து வந்த ரசிகர்களுக்கு ஒரு வண்ணத் திரைப்படத்தைப் பார்த்தது புது அனுபவமாக இருந்தது. ‘கேவா கலர்’ என்ற முறையில் இப்படம் படமாக்கப்பட்டது.

மிகப் பெரும் வெற்றிப் படமாக அமைந்த இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘அழகான பொண்ணுதான், மாசிலா உண்மைக் காதலே, உல்லாச உலகம்’ ஆகிய சூப்பர் ஹிட் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

ஹிந்தியிலிருந்து இந்தப் படம் தமிழுக்கு ரீமேக் செய்யப்பட்டது. பின்னர், தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.

பிரம்மாண்டமான அரங்குகள், சண்டைக் காட்சிகள் என படம் பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்த படம் இது.

Leave a Reply