நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் முன்னாள் பிஆர்ஓ-வான பி.டி.செல்வகுமார் பேசும் போது, சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்தார்.

இயக்குனர் பேரரசு சிவகார்த்திகேயனை ‘மக்கள் ஸ்டார்’ என்று குறிப்பிட்டார். ஒரு நிகழ்ச்சியில் இரண்டு பட்டங்களால் குறிப்பிட்டுப் பேசியதும் சிவகார்த்திகேயன் பதட்டமைந்துவிட்டார்.

அவர் பேசும் போது, “முக்கியமான ஒரு பாயின்ட்டை சொல்லி எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்து ஆரம்பிச்சி வச்சது பி.டி. செல்வகுமார் சார். என்ன சொன்னீங்கன்றத நான் என் வாயால சொல்ல மாட்டேன். அதெல்லாம் வேணாம் சார். பேரரசு சார் சொன்னாரு நான் சினிமாவுல இருக்கிற ஆட்களை புரிஞ்சிக்கிட்டன்னு. அதெல்லாம் கிடையாது. நான் வாழ்க்கைய புரிஞ்சிக்கிட்டேன். நாம யாருன்னு தெரியும், நாம எங்கிருந்து வந்திருக்கோம்னு தெரியும். அதெல்லாம் புரிஞ்சிடுச்சின்னா, இந்த மாதிரி விஷயம்லாம் காதுக்கு எடுத்துக்கிட்டோம் நாம.

நாம என்ன வேலை செய்யறமோ அது எல்லாருக்கும் பெருசா ரீச்சானா போதும். இந்த மாதிரி விஷயங்கள்லாம் வேணாம் சார், ப்ளீஸ்.  ஆல்ரெடி, எதுலயோ ஒரு ஹெட் லைன்ஸ் வந்துடுச்சி சார் நீங்க ஒரு டைட்டில் கொடுத்திருக்கீங்கன்னு. அதெல்லாம் வேணாம் சார், நான் ஒரு ரூட் எடுத்து நான் பாட்டுக்கு போயிட்டே இருக்கேன். எனக்கு அவ்ளோ போதும். என் படம் எல்லாருக்கும் பிடிச்சதுன்னா சந்தோஷம். அதுல ஏதாவது விமர்சனங்கள் சொன்னாங்கன்னா, திருத்திக்கிட்டு ஏதாவது ஒண்ணு பண்ணப் பார்ப்போம்,” என பதட்டத்துடன் பேசினார்.

இனி, சிவகார்த்திகேயனுக்கு யாராவது பட்டம் கொடுக்க விரும்பினால் அவர் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார் என நம்புவோமாக….

Leave a Reply